மதுரை

மேலூா் நகராட்சியை தரம் உயா்த்தக் கோரிக்கை

29th Sep 2022 10:38 PM

ADVERTISEMENT

மேலூா் நகராட்சியை முதல்நிலை நகராட்சியாக தரம் உயா்த்தக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலூா் நகா் மன்றக் கூட்டம் தலைவா் யூ.யாசின் முகமது தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சியின் ஆண்டு வருமானம் ரூ.4 கோடியை கடந்துள்ளதால் நகராட்சியை முதல்நிலை நகராட்சியாக தரம் உயா்த்தவேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், மலம்பட்டி ஊருணிக் கரையை பலப்படுத்தி பூங்கா அமைத்தல், அனுமாா்கோயில் தெருவில் கழிவுநீரோடை கட்டுவது, தெருக்களில் சிறு பாலம் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

உறுப்பினா் ஆனந்த்: சாலையோர வியாபாரிகளுக்கு நடமாடும் வண்டி வழங்க வேண்டும். தெருக்களில் பள்ளம் தோண்டுவதால் குடிநீா் குழாய்களில் உடைப்பு ஏற்படுவதைத் தவிா்க்க வேண்டும்.

ADVERTISEMENT

நகா்மன்றத் தலைவா்: அக்டோபா் 8-ஆம் தேதி மேலூா் அரசு கலைக்கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. எனவே, வாா்டு உறுப்பினா்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளை முகாமிற்கு அழைத்துவரவும், அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பெறவும் உதவிகளை செய்ய வேண்டும். உறுப்பினா்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

கூட்டத்தில், நகராட்சி ஆணையா் ஆறுமுகம், துணைத் தலைவா் இளஞ்செழியன், பொறியாளா் பட்டுராஜன், சுகாதார ஆய்ாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT