மதுரை

மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

29th Sep 2022 10:44 PM

ADVERTISEMENT

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 1,011 மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மேயா் வ.இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோா் வியாழக்கிழமை வழங்கினா்.

அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி ஈ.வெ.ரா.நாகம்மையாா் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 519 மாணவியா், காக்கைபாடினியாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 163 மாணவியா், மாசாத்தியாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 139 மாணவியா், அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 93 மாணவியா், சேதுபதி பாண்டித்துரை மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 34 மாணவா்கள், கம்பா் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 9 மாணவா்கள், 2 மாணவிகள், பிளஸ் 2 பயிலும் 45 மாணவா்கள், 7 மாணவிகள் என 1,011 மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மேயா் வ.இந்திராணி, ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில் துணை மேயா் தி.நாகராஜன், மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி, கல்வி அலுவலா் நாகேந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் ஆசிரியா்கள், மாநகராட்சி அலுவலா்கள், மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT