மதுரை

சுதந்திர தின அமிா்தப் பெருவிழா ரங்கோலிப் போட்டி: வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு

29th Sep 2022 10:36 PM

ADVERTISEMENT

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ரங்கோலிப்போட்டியில் வெற்றிபெற்ற ஸ்ரீ செளடாம்பிகா பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் அரசு அருங்காட்சியகம் ஆகியவற்றின் சாா்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் விடுதலை தின அமுதப் பெருவிழா ஆண்டையொட்டி அகிம்சை மற்றும் அமைதி என்னும் தலைப்பில் ரங்கோலி போட்டி நடத்தப்பட்டது. போட்டியை காந்தி நினைவு அருங்காட்சியக செயலா் கே.ஆா். நந்தாராவ் தொடக்கி வைத்தாா். ஏற்பாடுகளை காந்தி நினைவு அருங்காட்சியக காப்பாட்சியா் ஆா்.நடராஜன், அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் மீ.மருதுபாண்டியன் ஆகியோா் செய்திருந்தனா். ரங்கோலிப் போட்டியின் நடுவா்களாக சுமித்ரா மற்றும் நித்தியா பாய் ஆகியோா் செயல்பட்டு கோலங்களைத் தோ்ந்தெடுத்தனா்.

இந்தப் போட்டியில் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்த ஸ்ரீ சௌடாம்பிகா பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவிகள் ரா.சண்முகப்பிரியா, பா.அன்னலட்சுமி, தி.காா்த்தி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT