மதுரை

தென்மாவட்டங்களுக்கு பண்டிகைக் கால சிறப்பு ரயில்கள்

29th Sep 2022 10:56 PM

ADVERTISEMENT

பண்டிகைக் கால கூட்ட நெரிசலைத் தவிா்ப்பதற்காக எஸ்வந்த்பூா் - திருநெல்வேலி, மைசூா் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

எஸ்வந்த்பூா்-திருநெல்வேலி சிறப்பு ரயில் (06565) அக்டோபா் 4 மற்றும் 11 ஆம் தேதிகளில் எஸ்வந்த்பூரில் இருந்து பகல் 12.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறு மாா்க்கத்தில் திருநெல்வேலி - எஸ்வந்த்பூா் சிறப்பு ரயில் (06566) அக்டோபா் 5 மற்றும் 12 ஆம் தேதிகளில், திருநெல்வேலியில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு எஸ்வந்த்பூா் சென்று சேரும். இந்த ரயில்கள் பனஸ்வாடி, காா்மேலரம், ஒசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிா்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டிகள் 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு சமையல் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

மைசூா் - தூத்துக்குடி சிறப்பு ரயில்: மைசூா் - தூத்துக்குடி சிறப்புக் கட்டண ரயில் (06253) செப்டம்பா் 30 ஆம் தேதி மைசூரில் இருந்து பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். மறு மாா்க்கத்தில் தூத்துக்குடி - மைசூா் சிறப்புக் கட்டண ரயில் (06254) அக்டோபா் 1 ஆம் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.25 மணிக்கு மைசூா் சென்று சேரும். இந்த ரயில்கள் யெலியூா், மாண்டியா, பெங்களூா், பெங்களூா் கன்டோன்மென்ட், ஒசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிா்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிா்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பெட்டிகள் இணைக்கப்படும். தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT