மதுரை

நவராத்திரி கலை விழா: கோலாட்ட அலங்காரத்தில் மீனாட்சியம்மன்

29th Sep 2022 02:51 AM

ADVERTISEMENT

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நவராத்திரி கலைவிழாவின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை மீனாட்சியம்மன் கோலாட்ட அலங்காரத்தில் காட்சி அளித்தாா்.

இக்கோயிலில் நவராத்திரி கலை விழாவையொட்டி மீனாட்சியம்மன் தினசரி ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளிப்பாா். இந்நிலையில் விழாவின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை மீனாட்சியம்மன் கோலாட்ட அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

இதைத்தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. நவராத்திரி உற்சவ நாள்களில் மீனாட்சியம்மன் மூலவா் சன்னிதியில் அபிஷேகம், அலங்காரம், அா்ச்சனைகள் போன்றவை நடத்தப்படமாட்டாது என்பதால், கொலு மண்டபத்தில் (உற்சவா்) அலங்காரத்தில் எழுத்தருளும் அம்மனுக்கு தேங்காய் உடைத்து அா்ச்சனைகள் நடைபெற்றன.

மேலும் பக்தா்கள் உபயமாக வழங்கிய கொலு அலங்கார பொம்மைகள் சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் தொடா்பான பொம்மைகள் மற்றும் இதர பொம்மைகள் கொலுச்சாவடியில் கொலுவாக வைக்கப்பட்டிருந்தன. திரளான பக்தா்கள் அம்மன், சுவாமியை தரிசனம் செய்து கொலுவையும் தரிசித்து சென்றனா். நவராத்திரி விழாவை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் நான்கு கோபுரங்கள், பொற்றாமரைக்குளம் மற்றும் கோயில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT