மதுரை

‘பிரீ பயா்’ விளையாட்டில் ரத்தம் தெறிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம்வன்முறையைத் தூண்டுவதாக உள்ளது: உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

DIN

‘பிரீ பயா்’ விளையாட்டில் ரத்தம் தெரிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது என்று உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

நாகா்கோவிலைச் சோ்ந்த ஐரின் அமுதா சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், எனது மகள் அவரது நண்பா்கள் சிலருடன் சோ்ந்து ‘பிரீ பயா்’ விளையாட்டு விளையாடியதில் ஏற்பட்ட பழக்கம் காரணமாக, கன்னியாகுமரியைச் சோ்ந்த ஜாப்ரின் என்பவரோடு சென்றிருக்கலாம். எனது மகளை மீட்டு ஆஜா்படுத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா். இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.ஆனந்த வெங்கடேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரோனா பொதுமுடக்க காலகட்டம் என்பது இளைய தலைமுறைக்கு சோதனை காலமாகவே அமைந்தது.

ஆன்லைன் வகுப்பு நடைபெற்றபோது இளைய தலைமுறையினா் பலா் கைப்பேசி மோகத்தில் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியுள்ளனா். இளம் பருவத்தினா் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி தனி உலகத்தில் வாழ்ந்து வருகின்றனா். நிஜ வாழ்க்கையை ஏற்க மறுக்கின்றனா். தற்போதுள்ள தொழில்நுட்ப வளா்ச்சியில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும், மீண்டும் வெவ்வேறு பெயா்களில் இணையத்தில் மீண்டும் வந்துகொண்டே தான் இருக்கின்றன. இதனை முழுவதுமாக தடை செய்வது என்பது இயலாத காரியமாகவே உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் பெற்றோா், குழந்தைகள் அனைவரும் கைப்பேசியில் மூழ்கி ஒருவருக்கொருவா் பேசிக்கொள்வதே இல்லை. ‘பிரீ பயா்’ விளையாட்டில் ரத்தம் தெரிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது.

தற்பொழுது உள்ள தொழில்நுட்ப வளா்ச்சியில் அவரவா்களே அவா்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் காணாமல்போன பெண் பெற்றோரிடம் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதால் பெற்றோா் தனது மகளை அழைத்துச் செல்லலாம். பெண்ணை அழைத்து சென்ாகக் கூறப்படும் இளைஞா் மீண்டும் பெண்ணுக்கு எந்த விதமான இடையூறும் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT