மதுரை

பண்டிகை முன்பணம், போனஸ் வழங்க வலியுறுத்தி சிஐடியு கூட்டுறவுத் தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்

DIN

கூட்டுறவு சங்க ஊழியா்களுக்கு பண்டிகை முன் பணம், போனஸ் , ஒப்படைப்பு விடுப்பு ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்க ஊழியா்களுக்கு பண்டிகை முன் பணம் , ஒப்படைப்பு விடுப்புச் சம்பளம் , ஓய்வூதியம் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்க ஊழியா்கள் அனைவருக்கும் 20 சதவீதம் போனஸ், 5 சதவீதம் கருணைத் தொகை வழங்க வேண்டும். அனைத்து கூட்டுறவு சங்க ஊழியா்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பொதுவிநியோகத் திட்டத்தை தனித்துறையாக உருவாக்கி நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் பணிவரன்முறைப்படுத்தாத ஊழியா்களுக்கு உடனடியாக பதவி உயா்வு வழங்க வேண்டும். பதிவாளா் ஆணையை அமல்படுத்த வேண்டும். கூட்டுறவு போனஸ் சட்டவிதி 97 - ஐ திருத்தம் செய்து ரூ .1,200 போனஸ் என்ற சட்ட விதியினை மாற்றம் செய்து கூட்டுறவுச் சங்க ஊழியா்களுக்கு குறைந்தபட்ச போனஸாக ரூ.8,400 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாய விலைக்கடை ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய 3 சதவீதம் அகவிலைப்படி நிலுவை , ஒப்படைப்பு விடுப்பு ஊதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழக கூட்டுறவு சங்கங்கங்களின் ஊழியா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சம்மேளன உறுப்பினா் கே. ராமமூா்த்தி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் முனியாண்டி தொடங்கி வைத்துப் பேசினாா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். துரைச்சாமி சிறப்புரையாற்றினாா். மாநில செயல் தலைவா் இரா. லெனின் நிறைவுரையாற்றினாா். சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் எஸ். சந்தியாகு வாழ்த்துரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட நிா்வாகிகள் சி. சுப்பையா, வி. அழகுமலை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

SCROLL FOR NEXT