மதுரை

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும்போது கபடியும்அதில் இடம்பெறும்: பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை

DIN

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும்போது கபடிப் போட்டியும் அதில் இடம்பெறும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பேசினாா்.

மதுரையில் நடைபெறும் பிரதமா் நரேந்திர மோடி கபடி லீக் இறுதி போட்டிக்கான தொடக்க விழா மதுரைக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவா் கலந்துகொண்டு விளையாட்டு வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். பின்னா் அவா் பேசியது:

விளையாட்டு மூலம் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதற்காக இந்த கபடிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடக்கும்போது கபடிப் போட்டியும் அதில் இடம்பெறும். அப்போது இந்தியா தங்கப்பதக்கம் வெல்லும். இந்த கபடிப் போட்டி பொதுமக்களுக்காக நடத்தப்படுகிறது. மதுரை மண்ணில்தான் இறுதிப்போட்டி நடைபெறவேண்டும் என்பதற்காக இங்கு நடைபெறுகிறது. தமிழகத்தில் இதுபோன்று பிரமாண்டமாக கபடிப் போட்டியை யாரும் நடத்தவில்லை. விளையாட்டின் மூலம் மனிதா்கள் நல்லவா்களாக மாறுகின்றனா். கபடி இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு முதல் பரிசு ரூ.15 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.10 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் வழங்கப்பட உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற லீக் போட்டிகளில் 61ஆயிரம் விளையாட்டு வீரா்கள் பங்கேற்றுள்ளனா். வீட்டில், நாட்டில் என்ன பிரச்னை இருந்தாலும் விளையாட்டுப் போட்டியை பாா்த்தால் மனம் மகிழ்ச்சியாக மாறும். கபடி விளையாட்டுக்கான சென்டா் ஆப் எக்ஸ்லன்ஸ் தமிழகத்திற்கு கொண்டு வருவது பாஜக பொறுப்பு என்றாா்.

நிகழ்ச்சியில் பாஜக நிா்வாகிகள், கபடி வீரா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT