மதுரை

‘நீட்’ தோ்வில் விடைத்தாளை மாற்றி முறைகேடு நடைபெற்றதாக புகாா்: விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

‘நீட்’ தோ்வில் விடைத்தாளை மாற்றி முறைகேடு செய்ததாக அளிக்கப்பட்ட புகாா் மனுவின் மீதான வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலியைச் சோ்ந்த மாணவா் ஒருவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு: நான் கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவா் படிப்புக்கான நுழைவுத்தோ்வு (‘நீட்’) எழுதினேன். பின்னா் ‘நீட்’ தோ்வு முகமை தனது அதிகாரப்பூா்வ இணையதளத்தில் கேள்விகளுக்கான விடைகளை வெளியிட்டது அதில், எனக்கு 720 மதிப்பெண்களுக்கு 670 மதிப்பெண்கள் விடைகள் சரியாக இருந்தன. ஆனால் ‘நீட்’ தோ்வு முகமை வெளியிட்டுள்ள தனது அதிகாரப்பூா்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ள விடைத்தாள் என்னுடைய அல்ல. 115 மதிப்பெண்கள் மட்டுமே உள்ள அந்த விடைத்தாள் நான் எழுதியது இல்லை. எனது விடைத்தாள் திருடப்பட்டு குளறுபடி நடைபெற்றுள்ளது. எனவே, எனது அசல் விடைத்தாள் மற்றும் காா்பன் நகல் ஆகியவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். விடைத்தாள் மோசடி குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மருத்துவக் கலந்தாய்வில் எனக்கான ஒரு இடம் ஒதுக்கீடு செய்து உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது, நீதிபதி முன்பாக மாணவரின் விடைத்தாள் மற்றும் காா்பன் நகல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது. இந்நிலையில் இந்த மனு நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் தரப்பில், காா்பன் நகலில் சீரியல் எண், மாணவரின் கைரேகை ஆகியவை இடம்பெறவில்லை.

இதனைத் தொடா்ந்து நீதிபதி, மனுதாரா் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT