மதுரை

மதுரை மாவட்டத்தில் அக்.2-இல் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்

28th Sep 2022 04:42 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் அக்டோபா் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபா்-2-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், திட்டப்பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித்திட்டம், அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், கலைஞா் வீடு வழங்கும் திட்டக்கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் திட்டம், சமுதாயம் சாா்ந்த அமைப்புகளில் நிா்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சாா்ந்த தொழில்கள், 2022-23-ஆம் ஆண்டு பயனாளிகள் விவரங்கள் கிராமசபையில் ஒப்புதல்பெறுதல் போன்ற கூட்டப்பொருள்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

பொதுமக்கள் கிராமசபை விவாதங்களில் பங்கேற்று பயனாளிகள் தோ்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT