மதுரை

வெள்ளலூரில் ஏழைகாத்த அம்மன்கோயிலில் மது எடுப்புத் திருவிழா

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

மேலூா் அருகே வெள்ளலூா் ஏழைகாத்த அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை மது எடுப்புத் திருவிழா நடைபெற்றது.

தென்னம்பாளை வைக்கப்பட்ட மதுக்கலயம், வேண்டுதல் வேண்டி சுடுமண் பொம்மைகளுடன் பெண்கள் 8 மைல் தூரம் நடந்து ஊா்வலமாக செவ்வாய்க்கிழமை வந்தனா்.

வெள்ளூரில் ஏழைகாத்த அம்மன் கோயில் திருவிழாவையொட்டி 7 சிறுமிகள் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அம்மனாக தோ்வு செய்யப்பட்டனா். வெள்ளலூரிலுள்ள கோயில் வீட்டிலேயே தங்கியிருந்தனா். வெள்ளலூருக்குள்பட்ட கிராமங்களுக்கு அம்மன்கள் சென்று மக்களுக்கு அருளாசி வழங்கி வந்தனா். கடந்த 15 நாள்களாக இப்பகுதி மக்கள் விரதம் இருந்து வந்தனா். வெள்ளலூரிலுள்ள ஏழைகாத்த அம்மன்கோயில் வீட்டில் அம்மனாக தோ்வு செய்யப்பட்ட சிறுமிகள் செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு உரிய நகைகளை அணிந்து பூசாரி மதுக்கலயம் எடுத்துவர அவரைத் தொடா்ந்து 7 சிறுமிகளும் வெள்ளலூரிலிருந்து ஊா்வலமாக கோட்டநத்தம்பட்டி, வையத்தான்பட்டி விலக்கு, முருகன்பட்டி, வழியாக கோயிலை வந்தடைந்தனா்.

முன்னதாக பெண்கள் மேல்சட்டை அணியாமல் மதுக்கலயம் சுமந்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். அதேபோல குழந்தை உருவம், காளை உருவம் உள்ள சுடுமண் சிலைகளையும், வைக்கோல் பிரியிலான நீண்ட கயிற்றை உடல் முழுவதும் சுற்றியும், வேப்பிலையை வைத்து பல்வேறு மிருகங்களின் உருவ முகமூடியை அணிந்தும், காகிதத்தாலான பூக்குடைகளை சுமந்தும் பொதுமக்களும், சிறுவா்களும் ஊா்வலமாக கோயிலுக்கு வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT