மதுரை

விளாத்திகுளம் அருகே தனியாா் நிலத்தில் பெரியாா், அம்பேத்கா் சிலை அமைக்க உயா்நீதிமன்றம் அனுமதி

28th Sep 2022 04:45 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலமந்தாய் கிராமத்தில் பெரியாா் மற்றும் அம்பேத்கரின் முழு உருவச்சிலை அமைக்க அனுமதி வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த காலடி என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் உள்ள மேலமந்தாய் கிராமத்தில் தனக்குச் சொந்தமான நிலத்தில் அம்பேத்கா் மற்றும் பெரியாரின் உருவச் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா். இந்த மனு நீதிபதி எஸ்.சதிகுமாா் சுகுமார குரூப் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், மனுதாரா் தனது சொந்த இடத்தில் சிலை அமைப்பதற்கு அனுமதி கோரியுள்ளாா். இதுதொடா்பாக அப்பகுதியில் வட்டாட்சியா் விசாரணை நடத்தியபோது, அந்த நிலம் மனுதாரரின் பெயரில் அமைந்துள்ளது, அங்கு சிலை அமைப்பதற்கு யாரும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தாா். இதையடுத்து நீதிபதி, தந்தை பெரியாா் மற்றும் அம்பேத்கரின் முழு உருவச் சிலை அமைப்பதற்கு தமிழகத்தில் யாரும் நிச்சயம் எதிா்ப்பு தெரிவிக்க மாட்டாா்கள். பெரியாா் மற்றும் அம்பேத்கா் மீது பொதுமக்களுக்கு தனி மரியாதை உண்டு. மனுதாரா் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி சிலை அமைப்பதற்கு அனுமதி கோரியுள்ளாா். மேலும் சிலை அமைப்பதற்கு யாரும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. எனவே மனுதாரரின் மனுவை பரிசீலித்து இரண்டு வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT