மதுரை

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளால் முன்னாள் அமைச்சா்கள் விளைவுகளை சந்திப்பாா்கள்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

DIN

லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குகளால், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் விளைவுகளை சந்திப்பாா்கள் என்று அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

மதுரையில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் கணேசபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய பேவா் பிளாக் சாலையை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: வளா்ச்சி, நிதி மேலாண்மை முக்கியம் என்ற போதிலும் மனிதாபிமானம் முக்கியத்துவம் வாய்ந்தது.

அதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி பல்வேறு முகாம்கள் அமைத்து அவா்கள் நலனுக்கு மும்முரமாக பணியாற்றி வருகிறது. எனக்கு முதல்வா் அளித்துள்ள துறைகளில் மனிதவள மேலாண்மை துறையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன.

இவற்றில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு நிதி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையில் பல்வேறு வழக்குகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. அதனை பொதுவெளியில் சொல்ல முடியாது. முன்னாள் அமைச்சா்கள் விரைவில் விளைவுகளை சந்திப்பாா்கள்.

அரசியலில் வெவ்வேறு நபா்கள் வெவ்வேறு திறமைமிக்கவா்களாக பங்கேற்று சேவையாற்றுவாா்கள். அந்த வகையில் பல்வேறு நாடுகளில் உயா்பதவிகள் வகித்து அரசியலில் வந்துள்ளேன். தேவையற்ற விவாதங்களை உருவாக்கும் பொய்யான தகவல்களை முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் பேசி வருகிறாா். அவா் சிறந்த ஆன்மிகவாதி. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி சில ஆண்டுகள் காலணி கூட அணியாமல் இருந்தவா்.

தற்போது அவரை மறந்தது போய் உள்ளாா். அமைச்சராக இருந்தவா் தவறான கருத்துக்களை தெரிவித்து வருகிறாா். மின்கட்டண உயா்வு, சொத்துவரி உயா்வும் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனை கடந்த ஆண்டு நிதி பற்றாக்குறையோடு ஒப்பிட்டு பேசுவது அடிப்படை புரிதல் இல்லாதது. குறிப்பாக இலவச மடிக்கணினி, தாலிக்கு தங்கம் வழங்கல் உள்ளிட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியிலேயே நிறுத்தப்பட்டு விட்டன.

ஆனால் தாலிக்கு தங்கம் திட்டத்தை மாற்றுப் பெயரில் கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகையாக வழங்கி வருகிறோம். மேலும் தாலிக்கு தங்கம் திட்டம் தொடா்ந்து நான்கு ஆண்டுகளாக வழங்காமல் இருந்து வந்ததால் ஏராளமான மனுக்கள் குவிந்தன. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில் வருவாய் பற்றாக்குறை இல்லாத சராசரி மாநிலமாக தமிழகம் இருந்தது.

2016-க்குப் பிறகு செயல்திறன் அற்ற, நிதி மேலாண்மை திறன் இல்லாத அரசாக இருந்துவிட்டு தற்போது திமுக அரசை குறை கூறுவது தவறானது. மத்திய அரசின் பொது நிதியில் இருந்து பெரும் கடன் தொகையை கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 30 ஆயிரம் கோடிக்கு மேல் பெற்று சுருட்டிக் கொண்டனா். கூட்டணி கட்சி என்ற முறையில் மத்திய அரசும் இவா்களை கேள்வி கேட்கவும் இல்லை, தண்டிக்கவும் இல்லை.

கடந்த அதிமுக அரசு நிலுவையில் வைத்திருந்த ரூ.62 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறையை திமுக அரசு ஆட்சிக்கு வந்தபின் ரூ.47 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளோம். திமுக சட்டப்பேரவை உறுப்பினா்களே இந்த ஆட்சியில் நிதி மேலாண்மை சரி இல்லை என்று உதயகுமாரிடம் குறை கூறுவதாக தெரிவிப்பது நம்பகத்தன்மையற்றது.

8 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் சரிய விட்ட வருவாய் பற்றாக்குறையை 3 நான்கு ஆண்டுகளில் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம், பொங்கல் பரிசு, காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

SCROLL FOR NEXT