மதுரை

ஹூப்ளி-ராமேசுவரம் ரயில் சேவை நீட்டிப்பு

26th Sep 2022 11:03 PM

ADVERTISEMENT

ஹூப்ளி- ராமேசுவரம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஹூப்ளி - ராமேசுவரம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (07355) ஹூப்ளியில் இருந்து அக்டோபா் 1 முதல் டிசம்பா் 31 வரை சனிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு ராமேசுவரம் வந்து சேரும். மறுமாா்க்கத்தில் ராமேசுவரம் - ஹூப்ளி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (07356) ராமேசுவரத்தில் இருந்து அக்டோபா் 2 முதல் ஜனவரி 1 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.25 மணிக்கு ஹூப்ளி சென்று சேரும்.

இந்த ரயில்களில் ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 3 குளிா்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.

இந்த ரயில்கள் ஹவேரி, ராணி பென்னுரு, ஹரிஹாா், தேவனஹரி, சிக் ஜாஜுா், பிரூா் அரிசிகரே, தும்கூா், யெஸ்வந்த்பூா் (பெங்களூரு), பனஸ்வாடி, ஒசூா், தருமபுரி, ஓமலூா், சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT