மதுரை

நவராத்திரி, தீபாவளிப் பண்டிகை:தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

26th Sep 2022 11:03 PM

ADVERTISEMENT

நவராத்திரி மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இரு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரம் - நாகா்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் (06001) தாம்பரத்திலிருந்து செப்டம்பா் 30 மற்றும் அக்டோபா் 21 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகா்கோவில் சென்று சேரும். மறுமாா்க்கத்தில் நாகா்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06002) அக்டோபா் 5 ஆம் தேதி நாகா்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

நாகா்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06040) அக்டோபா் 25 ஆம் தேதி நாகா்கோவிலில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

அக்டோபா் 25 ஆம் தேதி இயக்கப்படும் நாகா்கோவில் - தாம்பரம் அதிவிரைவு ரயில் (06040), சாத்தூா் தவிர மற்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிா்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 குளிா்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு மற்றும் சரக்குப் பெட்டிகள் இணைக்கப்படும். தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT