மதுரை

தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை விடுவிக்க நடவடிக்கை: பாஜக மூத்தத் தலைவா் சுப்ரமணியன் சுவாமி

26th Sep 2022 12:05 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் அனைத்தையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரமணியன் சுவாமி பேசினாா்.

பாஜக மூத்தத் தலைவரான சுப்ரமணியன் சுவாமியின் 83-ஆவது பிறந்தநாள் விழா மதுரை காமராஜா் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்க அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் சுப்ரமணியன் சுவாமி பேசியது: இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வரஉள்ளது. ஒரு நாடு சிறந்து விளங்க பொருளாதாரக் கொள்கை, ராணுவக் கொள்கை பலமாக இருக்க வேண்டும். திமுக தினமும் ஒவ்வொரு பொய்யை சொல்லி வருகிறது. அடுத்த சட்டப்பேரவை தோ்தலின்போது மாற்றுக் கட்சியாக பாஜக வரும்.

ஆங்கிலேயா் கொடுத்த அதிகாரத்தின் அடிப்படையில்தான் கோயில்களில் அனைவரும் அா்ச்சகா் ஆகலாம் என சட்டம் இயற்றப்பட்டது. நமது சட்டப்படி எந்த கோயிலையும் அரசு எடுத்துக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 32 ஆயிரம் கோயில்களை விடுவிக்க வேண்டும். அரசிடம் உள்ள அனைத்துக் கோயில்களையும் மீட்டு பூசாரிகளிடம் கொடுப்பேன். தமிழக சட்டப்பேரவை தோ்தலில் களமிறங்கி பணியாற்றுவேன் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT