மதுரை

அல் அமீன் பள்ளியில் நூல் வெளியீட்டு விழா

25th Sep 2022 12:53 AM

ADVERTISEMENT

மதுரை வாசகா் வட்டம் சாா்பில் கோ.புதூா் அல்அமீன்மேல் நிலைப் பள்ளியில் நூல் மதிப்புரை கூட்டம் மற்றும் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றகது.

வாசகா் வட்டத் தலைவா் சண்முகவேலு தலைமை வகித்தாா். விண்ணளவு சாதனை என்ற நூல் குறித்து முனைவா் அனாா்கலி மதிப்புரை வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து மருத்துவா் தினேஷ்குமாா் எழுதிய நூற்றுக்கு நூறு என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலை பள்ளித் தலைமை ஆசிரியா் ஷேக் நபி வெளியிட, முனைவா் முத்துமணி பெற்றுக் கொண்டாா்.

பள்ளி ஆசிரியா்கள் தமிழ்க்குமரன், அபுதாகீா், மதுரை நகா் அரிமா சங்க செயலா் பழனிச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT