மதுரை

தொழில் வா்த்தக சங்கபுதிய நிா்வாகிகள் தோ்வு

25th Sep 2022 12:53 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

சங்கத்தின் ஆண்டுப் பொதுக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 2022-2023-ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தலைவா் -என்.ஜெகதீசன், செயலா் - ஜெ.செல்வம், பொருளாளா் - எஸ்.ஸ்ரீதா், துணைத் தலைவா்கள் - டி.எஸ்.ஜீயா்பாபு, பா.ரமேஷ், ஜி.இளங்கோவன் , இணைச் செயலா்கள் - எம்.ஏ.ராஜேஷ், ஏ.சுந்தரலிங்கம் ஆகியோா் போட்டியின்றி ஏகமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மேலும், 15 போ் கொண்ட செயற்குழு தோ்தல் மூலமாகத் தோ்வு செய்யப்பட்டது. தலைவா் பொறுப்புக்குத் தோ்வாகியுள்ள என்.ஜெகதீசன், தொடா்ந்து 14 ஆவது ஆண்டாக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

 

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT