மதுரை

வைணவத்தலங்கள் சுற்றுலா:அழகா்கோவிலில் வரவேற்பு

25th Sep 2022 12:53 AM

ADVERTISEMENT

அழகா்கோவிலுக்கு சனிக்கிழமை ஆன்மிக சுற்றுலா வந்த பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு மதுரைக்கு அருகிலுள்ள வைணவத் தலங்களுக்கான ஒரு நாள் ஆன்மிகச் சுற்றுலாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு சுற்றுலாக் கழகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. அதன்படி அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில், திருமோகூா் காளமேகப்பெருமாள் கோயில், கூடழலகா் பெருமாள் கோயில், ஒத்தக்கடை நரசிங்கப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சுற்றுலாத்துறையினா் பக்தா்களை அழைத்துச்சென்றனா். அழகா்கோவிலுக்கு அழைத்துவரப்பட்ட பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது. அவா்களுக்கு தோசை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT