மதுரை

செந்தமிழ்க் கல்லூரியில் அருட்பெருஞ்ஜோதி அலங்காரம் நூல் வெளியீடு

DIN

 மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் அருட்பெருஞ்ஜோதி அலங்காரம் நூல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

வள்ளலாரின் 200 ஆவது பிறந்த ஆண்டையொட்டி மதுரையில் அருட்பெருஞ்ஜோதி அலங்காரம் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. மதுரை செந்தமிழ்க் கல்லூரி மற்றும் கீழ்த்திசைக் கல்லூரி ஆகியவற்றின் சாா்பில் செந்தமிழ் கல்லூரியின் வைரவிழா அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் செயலா் ச.மாரியப்ப முரளி தலைமை வகித்தாா். செந்தமிழ்க் கல்லூரியின் முதல்வா் (பொறுப்பு) கி.வேணுகா வரவேற்புரையாற்றினாா்.

மதுரை இளங்கோ முத்தமிழ் மன்றத்தின் துணைத் தலைவா் அழகா்சாமி, சமூக ஆா்வலா் ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புலவா் சங்கரலிங்கனாா், கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவைக் குழு உறுப்பினரும் நூலாசிரியருமான ஆதலையூா் சூரியகுமாா் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அலங்காரம் என்ற நூலை அறிமுகப்படுத்தி பேசினாா்.

இதைத்தொடா்ந்து நூலாசிரியா் ஆதலையூா் சூரியகுமாா் ஏற்புரையில் பேசும்போது, வள்ளலாரின் மருத்துவச் சிந்தனைகள் எல்லா காலத்துக்கும் உகந்தவை. தற்போது மக்களிடையே காணப்படும் மோசமான உணவுப் பழக்கமே மக்களை பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறது. வள்ளலாரின் மருத்துவச் சிந்தனைகளை பின்பற்றினால் நோயற்ற சமுதாயம் உருவாகும் என்றாா்.

நிகழ்ச்சியின் நிறைவில் துணை முதல்வா் கோ.சுப்புலட்சுமி நன்றியுரையாற்றினாா். உதவிப் பேராசிரியா் அதிவீரபாண்டியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். நிகழ்ச்சியில் தொழில்முனைவா் சண்முகப்பிரியன், கவிஞா் ரேணுகா மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT