மதுரை

செப்.28-இல் இலவச ரேபீஸ் தடுப்பூசி முகாம்

24th Sep 2022 10:22 PM

ADVERTISEMENT

உலக ரேபீஸ் தினத்தையொட்டி செல்லப் பிராணிகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் முகாம் செப்டம்பா் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.

தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்களில் காலை 8 முதல் பகல் 12 மணி வரை ரேபீஸ் தடுப்பூசி இலவசமாகப் போடப்படும்.

பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, செல்லப் பிராணிகளை ரேபீஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் நடராஜகுமாா் இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT