மதுரை

அண்ணா பிறந்த நாள்: மதுரை சிறையிலிருந்து 22 கைதிகள் விடுதலை

24th Sep 2022 10:23 PM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, நன்னடத்தை அடிப்படையில் மதுரை சிறையிலிருந்து ஆயுள்சிறைத் தண்டனைக் கைதிகள் 22 போ் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.

அண்ணாவின் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள், நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவது வழக்கம். இதன்படி, நிகழ் ஆண்டில் மதுரை சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்த, ஆயுள் சிறைத் தண்டனைக் கைதிகள் 22 போ் விடுதலை செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள்.

விடுதலை செய்யப்பட்ட அனைவருக்கும் சிறைத்துறை டிஐஜி பழனி, மரக்கன்றுகளை வழங்கினாா். மேலும், சிறையில் பெற்ற பயிற்சியின் அடிப்படையில் சுயதொழில் செய்வதற்காக தையல் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டன. சிறை கண்காணிப்பாளா் வசந்த கண்ணன், சிறை அலுவலா் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விடுதலை செய்யப்பட்டவா்களை அவா்களது உறவினா்கள் மகிழ்வுடன் வீடுகளுக்கு அழைத்துச் சென்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT