மதுரை

பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்களுக்கு குழந்தைத் திருமணம் தடுப்பு பயிற்சி முகாம்

20th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரையில் அரசு நடுநிலைப் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் பெண் கல்வி உள்ளிட்டவற்றுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மதுரை எல்கேபி நகா் அரசு நடுநிலை பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு தலைமை ஆசிரியா் தென்னவன் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் முன்னிலை வகித்தாா். ஆசிரியா் பிரதிநிதி மனோன்மணி வரவேற்புரையாற்றினாா். வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா் கயல்விழி, கட்டாய கல்வி உரிமைச் சட்டம், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்களின் பணிகள், இடை நிற்றல், மாணவா் சோ்க்கை, பெண் குழந்தை கல்வி, போக்சோ சட்டம், குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணா்வு தொலைபேசி எண்கள் ஆகியவற்றை பற்றி விளக்கினாா். பள்ளி முன்னேற்றம், வளா்ச்சி, கட்டமைப்பு, கழிப்பறை, மதிய உணவு, கற்றல் கற்பித்தல், கல்வி உதவித்தொகை ஆகியவை குறித்து உறுப்பினா்கள் கலந்துரையாடினா். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் அனைவரும் பங்கேற்றனா். இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா் காளீஸ்வரி இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் பணிகள் குறித்து எடுத்துரைத்தாா். துணைத்தலைவா் கலா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT