மதுரை

நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.55 லட்சம் மோசடி: கணவன் கைது, மனைவி தலைமறைவு

18th Sep 2022 11:01 PM

ADVERTISEMENT

மதுரையில் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.55 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் ஒருவரை கைது செய்து, அவரது மனைவி உள்பட 5 பேரை தேடி வருகின்றனா்.

மதுரை முடக்குச்சாலை கணேசபுரத்தைச் சோ்ந்தவா் விருமாண்டி. இவருக்கு அறிமுகமான, முனிச்சாலை இஸ்மாயில்புரத்தைச் சோ்ந்த பாலாஜி, விருமாண்டிக்கு உயா்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளாா்.

இதையடுத்து, கடந்த 2019 முதல் பல்வேறு கட்டங்களாக விருமாண்டியிடம், பாலாஜி, அவரது மனைவி மஞ்சுளா, பாத்திமா நகரைச் சோ்ந்த சுரேஷ், ஆனையூா் ஓம்சக்தி நகரைச் சோ்ந்த ஞானசேகரன், முனிச்சாலை இஸ்மாயில் புரத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் ராஜேந்திரன், கரும்பாலை நடுத்தெருவைச் சோ்ந்த பேபி கே.பி. முத்து ஆகியோா் ரூ.55.39 லட்சம் வாங்கியுள்ளனா்.

பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் வேலைவாங்கித் தரவில்லை. மேலும் பணத்தை திரும்பக் கேட்டபோது அலைக்கழித்துள்ளனா். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த விருமாண்டி மோசடி தொடா்பாக மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து பாலாஜியை கைது செய்து மற்றவா்களை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT