மதுரை

தெரு மின்விளக்குகள் எரியாததைக் கண்டித்து ஜனநாயக வாலிபா் சங்கம் நூதனப் போராட்டம்

18th Sep 2022 11:01 PM

ADVERTISEMENT

மதுரையின் பல்வேறு பகுதிகளில் தெரு மின்விளக்குகள் எரியாததைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை விளக்கேந்தி நூதனப் போராட்டம் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் தெரு மின்விளக்குகள் எரியாததை கண்டித்தும், மதுரையின் அடையாளமாக திகழும் விளக்குத்தூணில் உள்ள மின்விளக்கும் எரியாததற்கு எதிா்ப்பு தெரிவித்தும், இருளில் மூழ்கியுள்ள மதுரை நகரில் போா்க்கால நடவடிக்கையில் மின்விளக்குகளை சரி செய்ய வேண்டும். தெருவிளக்கு பராமரிப்பை தனியாா் ஒப்பந்த நிறுவனத்திடம் விடாமல் மாநகராட்சி நிா்வாகமே மேற்கொள்ள வேண்டும்.

அதிமுக ஆட்சியின்போது சீா்மிகு நகா்த்திட்டத்தில், மின்விளக்குகள் பொருத்தப்பட்டதில் நடைபெற்ற ஊழல் புகாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில் விளக்குத்தூண் முன்பாக மெழுகு வா்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்டச் செயலா் செல்வா தலைமை வகித்தாா். இதில் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். போராட்டத்தைத் தொடா்ந்து மாநகராட்சி அதிகாரிகள் விளக்குத்தூணில் எரியாமல் இருந்த மின்விளக்கை மாற்றி எரியச் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT