மதுரை

வன்கொடுமைத் தடுப்பு வழக்கு: இதுவரை வழங்கிய நிவாரணஉதவிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் குறித்து அறிக்கைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

வாடிப்பட்டி அருகே உள்ள பொட்டுலுபட்டியைச் சோ்ந்த தனபால் தாக்கல் செய்த மனு:

குற்றச் சம்பவங்களில் பாதிக்கப்படும் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் சமூகத்தைச் சோ்ந்தவா்களின் குடும்பத்தினருக்கு வன்கொடுமைச் தடுப்புச் சட்ட விதிகளின்படி, 3 மாதங்களுக்குள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் குடும்ப உறுப்பினா்களில் ஒருவருக்கு அரசுப் பணி, பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு கல்வி, மூன்று மாதங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு போன்ற பொருள்கள் வழங்க வேண்டும்.

ஆனால், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளைப் பின்பற்றி பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுவதில்லை. ஆகவே, தமிழகத்தில் கடந்த 2001 முதல் 2017 வரை வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களைக் கண்டறிந்து உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு விவசாய நிலம், வேலைவாய்ப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோா் கொண்ட அமா்வுமுன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதிவான கொலை வழக்குகளில் இதுவரை எத்தனை குடும்பத்தினருக்கு விவசாய நிலம்,

அரசுப் பணி, மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது என்பது குறித்து தமிழக உள்துறைச் செயலா் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT