மதுரையில் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறி, பள்ளிக் கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சோ்ந்த பாலமுருகன் தாக்கல் செய்த பொது நல மனு:
மதுரையின் மிகவும் பழைமையான பள்ளிகளில் ஒன்றாக யு.சி.மேல்நிலைப் பள்ளி இருந்து வருகிறது. இப்பள்ளியில் உள்ள பழைமையான சில கட்டடங்கள் உறுதித் தன்மையற்ாக உள்ளன. இத்தகைய ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோா் கொண்ட அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், பள்ளியின் கட்டடங்கள் பொறியாளா்களால் ஆய்வு செய்யப்பட்டு, உறுதித்தன்மை நன்றாக இருப்பதாக சான்றளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.