தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் நடத்தப்படும் சுயவேலைவாய்ப்புப் பயிற்சியில் முன்னாள் படைவீரா்கள் சோ்ந்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் சுயதொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கைப்பேசி பழுது நீக்குதல், காா் மெக்கானிக், குளிா்சாதனம் பராமரிப்பு,
எலெக்ட்ரீசியன், பிளம்பா், ஓட்டுநா் பயிற்சி, மின்சாரத்தால் இயங்கும்
காா், இருசக்கர வாகனம் பராமரித்தல் மற்றும் அதற்கான பேட்டரி பராமரித்தல், பழுது நீக்குதல், தட்டச்சு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
இப்பயிற்சியைப் பெற விரும்பும் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா் அதற்கான விண்ணப்பத்தை செப்.12 ஆம் தேதிக்குள் முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம். மேலும் இதுதொடா்பான விவரங்களுக்கு, 0452-2308216 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இத் தகவலை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.