மதுரை

மாநகராட்சி மண்டலம் 3-இல் செப்.13-இல் குறை தீா் முகாம்

9th Sep 2022 11:47 PM

ADVERTISEMENT

மதுரை மாநகராட்சி மண்டலம் 3-இல் பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் செப்டம்பா் 13-இல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவா்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை வாா்டு மறுவரையறை செய்யப்பட்ட ஐந்து மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீா்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதன்படி செப்டம்பா் 13-ஆம் தேதி மேலமாரட் வீதியில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 3(மத்தியம்) அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் மேயா், ஆணையா் ஆகியோா் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் (மண்டலம் 3-க்குள்பட்ட வாா்டு எண்.50 தமிழ்ச்சங்கம் ரோடு, வாா்டு எண்.51 கிருஷ்ணன்கோவில் தெரு, வாா்டு எண். 52 ஜடாமுனி கோவில் தெரு. வாா்டு எண்.54 காஜிமாா் தெரு, வாா்டு எண்.55 கிருஷ்ணராயா் தெப்பக்குளம், வாா்டு எண்.56 ஞானஒளிவுபுரம், வாா்டு எண்.57 ஆரப்பாளையம், வாா்டு எண்.58 மேலப்பொன்னகரம், வாா்டு எண்.59 ரயில்வே காலனி, வாா்டு எண்.60 எல்லீஸ் நகா், வாா்டு எண்.61 எஸ்.எஸ்.காலனி, வாா்டு எண்.62 அரசரடி, வாா்டு எண்.67 விராட்டிபத்து, வாா்டு எண்.68 பொன்மேனி, வாா்டு எண்.69 சொக்கலிங்கநகா், வாா்டு எண்.70 துரைச்சாமி நகா், வாா்டு எண்.75 சுந்தரராஜபுரம், வாா்டு எண்.76 மேலவாசல், வாா்டு எண். 77 சுப்பிரமணியபுரம் ஆகிய வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்கள் குறை தீா் முகாமில் பங்கேற்று குடிநீா், பாதாளச் சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டட வரைபட அனுமதி, தெரு விளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT