அழகா்கோவில் திருபவுத்திர உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ஆவணி மாதத்தில்வரும் பெளா்ணமி நாளன்று இந்தவிழா கொண்டாடப்படும். அதன்படி சனிக்கிழமை (செப்.10) இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதற்கான விழா செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருபவுத்திர உற்சவத்தையொட்டி பட்டுநூல் கயிறுகள் மாலையாக கட்டப்பட்டு 108 வெள்ளிக்கலசங்களில் புனித தீா்த்தம் நிரப்பப்பட்டு பெருமாள் முன் வைக்கப்பட்டது. இக்கும்பங்கள் வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, 136 வகையான மூலிகை திரவியங்கள் புனிதநீரில் கலந்து வைக்கப்பட்டு, பால், பன்னீா், தேன் உள்ளிட்ட பதினாறுவகையான அபிஷேகங்களும் நடைபெற்றது. பட்டுநூல் மாலை சாற்றுதல் வைபவம் (திருபவுத்திரம்) பெளா்ணமிநாளில் நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை தக்காா் வெங்கடாசலம், துணை ஆணையா் ராமசாமி மற்றும் கள்ளழகா்கோயில் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.