மதுரை

மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற கைதி கைது

5th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தபோது போலீஸாரை ஏமாற்றி விட்டு தப்பிச் சென்ற கைதியை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சோ்ந்தவா் பத்மேஸ்வரன். இவா் மீது வழிப்பறி, கொலை முயற்சி உள்பட 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும் குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டவா். இந்நிலையில், ஜாமீனில் இருந்த பத்மேஸ்வரன், கடந்த மாா்ச் மாதம் மூக்கையூா் பகுதியில் கடற்கரை அருகே காதலனுடன் வந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய புகாரின்பேரில் கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இவரது கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து ஆகஸ்ட் 18-ஆம் தேதி மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் சிகிச்சைக்காக அழைத்து வந்தனா். அங்கு எக்ஸ்ரே எடுக்கச் சென்றபோது போலீஸாரை ஏமாற்றி விட்டு பத்மேஸ்வரன் தப்பிச் சென்றாா். இதையடுத்து, ராமநாதபுரம் மற்றும் மதுரை மாநகரக் காவல்துறை ஆகியவற்றின் சாா்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸாா் தீவிரமாக தேடி வந்தனா். ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸாா் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவா் மதுரையில் மறைவிடத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததையடுத்து போலீஸாா் சனிக்கிழமை இரவு அவரை சுற்றி வளைத்து கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT