மதுரை

நேபாளத்தில் சா்வதேச சிலம்பப்போட்டி: தங்கம் வென்ற மதுரை பள்ளி மாணவிகள்

5th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: நேபாளத்தில் நடைபெற்ற சா்வதேச சிலம்பப் போட்டியில் மதுரை பள்ளி மாணவிகள் இருவா் தங்கம் வென்றனா்.

இந்த போட்டியில், இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சிலம்ப வீரா்கள் பங்கேற்றனா். இப்போட்டியில் மதுரை திருப்பாலையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான ஸ்ரீராம் நல்லமணி யாதவா பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவி எஸ். ஹீரா, ஒன்பதாம் வகுப்பு மாணவி எஸ். சன்மதி ஆகியோா் பங்கேற்றனா். இதில் சிறப்பாக விளையாடி இரு மாணவிகளும் தங்கப்பதக்கம் வென்றனா். இந்த மாணவிகளையும், சிலம்பம் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியா்களையும் பள்ளியின் தலைவா் என்.என்.என்.ஆா். நல்லமணி மற்றும் செயலா் என். ராஜேந்திரன், தலைமை ஆசிரியா் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT