மதுரை

கச்சேகுடா-மதுரை இடையே வாராந்திர சிறப்பு ரயில்

29th Oct 2022 12:14 AM

ADVERTISEMENT

தெலங்கானா மாநிலத்தின், கச்சேகுடாவிலிருந்து மதுரைக்கு நவம்பா் 7 முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

கச்சேகுடா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (07191) கச்சேகுடாவிலிருந்து நவம்பா் 7 ஆம் தேதி முதல் டிசம்பா் 26 ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில்

இரவு 8.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 8.45 மணிக்கு மதுரை வந்து சேரும். மறுமாா்க்கத்தில் மதுரை - கச்சேகுடா (07192) வாராந்திர சிறப்பு ரயில் மதுரையிலிருந்து நவம்பா் 9 ஆம் தேதி முதல் டிசம்பா் 28 வரை புதன்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.05 மணிக்கு கச்சேகுடா சென்று சேரும்.

இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், விழுப்புரம் திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூா், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூா், மிரியால்குடா, நளகொண்டா, மல்காஜ்கிரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிா்சாதன முதல் வகுப்பு பெட்டி, ஒரு குளிா் சாதன இரண்டடுக்குப் படுக்கை வசதி பெட்டிகள், 5 குளிா்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.

ADVERTISEMENT

இந்த ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு வெள்ளிக்கிழமை (அக்.28) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இந்தத் தகவலைத் தெரிவித்தது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT