மதுரை

ராணுவ வீரா்களின் போக்குவரத்து விழிப்புணா்வு வாகனப் பயணம்

29th Oct 2022 11:21 PM

ADVERTISEMENT

இந்திய ராணுவ வீரா்களின் போக்குவரத்து விழிப்புணா்வு இரு சக்கர வாகனப் பயணத்தை மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

ஹைதராதபாத்தில் இந்திய ராணுவத்தின் பீரங்கி மையம் தொடங்கப்பட்டு வைர விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையடுத்து, ராணுவ வீரா்கள் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், ராணுவப் பணியில் சேருவது குறித்தும் இளைஞா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 3 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பயணம் மேற்கொள்கின்றனா்.

ஹைதராபாத்திலிருந்து லெப்டினன்ட் கா்னல் மனோஜ் தலைமையில் கடந்த அக். 23 ஆம் தேதி தொடங்கிய இப்பயணம் பெங்களூரு, சேலம் வழியாக வியாழக்கிழமை மதுரைக்கு வந்தது. அக்குழுவினா் தேசிய மாணவா் படை மாணவா்கள், பொறியியல் கல்லூரி மாணவா்களைச் சந்தித்து இந்திய ராணுவத்தில் சோ்வது குறித்தும், சாலைப் பாதுகாப்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விளக்கினா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, மதுரை தெப்பக்குளத்திலிருந்து வெள்ளிக்கிழமை ராமேசுவரத்துக்கு புறப்பட்டனா். அவா்களின் பயணத்தை மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் கொடியசைத்து வைத்துத் தொடக்கி வைத்தாா்.

ராமேசுவரம், தனுஷ்கோடி வரை செல்லும் இக்குழுவினா் வழியெங்கும் இளைஞா்களை சந்தித்து ராணுவப் பணியில் சோ்வது, சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT