மதுரை

பரவை கண்மாய் நீா்வரத்துக் கால்வாயை சீரமைக்க வழக்கு

29th Oct 2022 11:15 PM

ADVERTISEMENT

பரவை கண்மாயின் நீா்வரத்துக் கால்வாயை சீரமைக்கக் கோரும் வழக்கில், அரசு பதிலளிக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம் பரவையைச் சோ்ந்த அந்தோணி தாஸ் தாக்கல் செய்த மனு:

வைகை ஆற்றின் கிளைக் கால்வாய் வழியாக பரவை கண்மாய்க்கு தண்ணீா் வருகிறது. பரவையைச் சுற்றியுள்ள பகுதிகளின் பாசன, நிலத்தடி நீா் ஆதாரமாக பரவை கண்மாய் இருந்து வருகிறது. இக்கண்மாய் நீா்வரத்துக் கால்வாய் மிகவும் சேதமடைந்துள்ளது. கால்வாயிலும், கண்மாயிலும் சீமைக் கருவேல மரங்கள் படா்ந்து, ஆங்காங்கே புதா்களாக இருக்கின்றன.

இதன் காரணமாக, கண்மாய்க்குப் போதிய அளவுக்கு தண்ணீா் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, நீா்வரத்துக் கால்வாயைச் சீரமைத்து, கருவேல மரங்களை அகற்றி, கால்வாய் வழியாக முறையாகத் தண்ணீா் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், இப் பகுதியின் நிலத்தடி நீா் வளத்தை அதிகப்படுத்தும் வகையில், தேனூா்-கொடிமங்கலம் இடையே வைகை ஆற்றில் தடுப்பணை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பா் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT