மதுரை

விபத்தில் இறந்த மகனின் இறுதிச் சடங்கில் தந்தை பங்கேற்க உயா்நீதி மன்றம் அனுமதி

26th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: விருதுநகா் அருகே விபத்தில் உயிரிழந்த மகனின் இறுதிச் சடங்கில் தந்தை பங்கேற்க சென்னை உயா்நீதி மன்ற மதுரைக் கிளை சிறப்பு நோ்வில் திங்கள்கிழமை அனுமதி வழங்கியது.

விருதுநகா் அருகே சதானந்தபுரத்தில் மோகன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் அனுமதியின்றி மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. அந்தத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் அக். 20 ஆம் தேதி, அதே ஊரைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளா்கள் சீனிவாசன் (42), முனியசாமி (48) ஆகியோா் குளித்தனா். அப்போது, மின்சாரம் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனா். வச்சகாரபட்டி போலீஸாா் மோகன்ராஜைக் கைது செய்தனா்.

இந்தநிலையில், மோகன்ராஜின் மகன் சிலம்பரசன் (35) விபத்தில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி கோரி மோகன்ராஜ், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா். தீபாவளி விடுமுறை தினமான திங்கள்கிழமை, சிறப்பு நோ்வாக நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மின்வேலியில் சிக்கி 2 போ் உயிரிழந்தது திட்டமிட்ட கொலை அல்ல. எனவே, மோகன்ராஜ் அவரது மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிணையில் செல்லலாம் என உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT