மதுரை

தவழும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் நலத்திட்ட உதவி

26th Oct 2022 02:20 AM

ADVERTISEMENT

மதுரையில் மாவட்ட தவழும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மதுரை பாண்டி கோவில் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் புஷ்பராஜ், பொதுச் செயலா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் கருப்பையா வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட அலுவலா் ரவிச்சந்திரன், உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீா்கள் அமைப்பின் ஷேக் மஸ்தான், அல்அமீன் பள்ளி ஆசிரியா் நூருல்லாஹ், காமராஜா் பல்கலைக் கழக தமிழ்துறைச் தலைவா் சத்தியமூா்த்தி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினா். மாவட்டத் தலைவா் நாகபாஸ்கா் நன்றி கூறினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொருளாளா் ஜெயராமன் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT