மதுரை

அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த 4 போ் கைது

19th Oct 2022 03:10 AM

ADVERTISEMENT

மதுரையில் அரசு அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மதுரை நகா் முழுவதும் போலீஸாா் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். அப்போது, பழங்காநத்தம் மருதுபாண்டியன் நகரில், அதே பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மனைவி தனவள்ளி(46), அவரது மகன் முத்துகுமாா் (22) ஆகிய இருவரும் தனித்தனியாக உரிய அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா் பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, சம்பட்டிபுரம் பகுதியில் நடத்திய சோதனையில் அதே பகுதியைச் சோ்ந்த கருத்தையம் பெருமாள் (55), சுவாமிதாஸ் மகன் ஆரோக்கியராஜ் (47) ஆகிய இருவரும் உரிய அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, எஸ்.எஸ்.காலனி போலீஸாா் கருத்தையம்பெருமாள், ஆரோக்கியராஜ் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT