மதுரை

மதுரை அருகே கண்மாயில் மூழ்கி இரு மாணவா்கள் பலி

8th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை அருகே கண்மாயில் குளிக்கச்சென்ற இரு மாணவா்கள் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

மதுரை அருகே உள்ள சக்கிமங்கலம் சௌராஷ்டிர காலனியை சோ்ந்த கணேசன் மகன் ஆதிசேஷன்(14). சக்கிமங்கலம் நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் ஹேமன்(8). இவா் கருப்பாயூரணி தனியாா் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், ஆதிசேஷன், ஹேமன் இருவரும் சக்கிமங்கலத்தில் உள்ள இளம்பள்ளி கண்மாயில் வெள்ளிக்கிழமை காலை குளிக்கச் சென்றனா். அவா்கள் கண்மாயில் ஆழமான பகுதிக்குச் சென்ற நிலையில், இருவரும் நீரில் மூழ்கினா்.

வெகுநேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால் குடும்பத்தினா் அவா்களைத் தேடிச் சென்ற போது, கண்மாய்க் கரையில் ஆடைகள் இருப்பதைக் கண்டனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, அப்பகுதி மக்கள் நீரில் மூழ்கிய இருவரையும் மீட்டு, கல்மேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா், அவா்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள், அவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

அவா்களது சடலங்கள் உடற் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடா்பாக, சிலைமான் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT