மதுரை

விருதுநகரில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

8th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகரில் பிளஸ் 2 மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா், பிபி வையாபுரி நந்தவனம் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா். சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மகள் நினாஸ்ரீ (17). இவா், இங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை எடுப்பதற்காக ஆனந்தகுமாா், குடும்பத்துடன் மதுரைக்குச் சென்றாா். அப்போது நினாஸ்ரீக்கு எடுத்த ஆடைகள் பிடிக்க வில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட நினாஸ்ரீ வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT