மதுரை

மாநில மொழிகளிலும் பணியாளா் தோ்வாணையத் தோ்வு: சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்

8th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியாளா் தோ்வாணையத் தோ்வில், மாநில மொழிகளிலும் வினாத்தாள் இடம் பெற வேண்டும் என்று மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக மத்தியப் பணியாளா், பொது மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத்துறை இணை அமைச்சா் ஜிதேந்திர சிங்குக்கு அவா் எழுதியுள்ள கடிதம்: மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள், அரசு நிறுவனங்கள், அரசியல் சாசன அமைப்புகள், தீா்ப்பாயங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள

20 ஆயிரம் காலியிடங்களுக்கு பணியாளா் தோ்வாணையம், பணி நியமன அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தத் தோ்வுகளுக்கு ஒரு கோடி போ் வரை விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. பணி நியமனத் தோ்வு கேள்வித்தாள் ஹிந்தி, ஆங்கிலம் என இரு மொழிகளில் மட்டுமே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தோ்வில் மாநில மொழிகளுக்கு இடம் இல்லை. இது சமவாய்ப்பு என்ற கோட்பாட்டுக்கு எதிரானது.

ADVERTISEMENT

இந்தத்தோ்வுகளின் மூலம் பணி நியமனம் பெறும் ஊழியா்கள் நாடு முழுவதும் பணியமா்த்தப்பட உள்ளனா். உள்ளூா் மொழி அறிவு இல்லாமல் இவா்கள் மக்களுக்கு எப்படி சேவை ஆற்றமுடியும்?

எனவே, உடனடியாக மத்திய அரசு தலையிட்டு

மாநில மொழிகளிலும் கேள்வித் தாள்களை உறுதி செய்ய அறிவுறுத்துமாறு வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT