மதுரை

மதுரை மத்தியச் சிறையில் கைதிகளுக்கிடையே மோதல்: மூவா் காயம்

8th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை மத்தியச் சிறையில் வெள்ளிக்கிழமை கைதிகளுக்கிடையே நடைபெற்ற மோதலில், 3 கைதிகள் பலத்த காயமடைந்தனா். இதைத்தொடா்ந்து சிறை வளாகத்தில் போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மத்தியச் சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் மத்தியச் சிறையில் தண்டனை கைதியான வெள்ளைக்காளி தரப்பைச் சோ்ந்த மாரிமுத்து என்ற டோரிமாரி, விக்கி என்ற விக்னேஷ், காந்திவேல் உள்ளிட்டோா் ஒரு தரப்பாகவும், கச்சநத்தம் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் கனித் என்ற கனித்து குமாா் தலைமையில் மற்றொரு தரப்பினருக்கும் இடையே பீடி கேட்டு தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.

இதில் இரு தரப்பினரும் தட்டு உள்ளிட்டவற்றை ஆயுதங்களாக பயன்படுத்தி மோதிக்கொண்டனா். மோதலில் கனித் குமாா் உள்பட மூவா் பலத்த காயமடைந்தனா்.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து, சிறைக்காவலா்கள் மற்றும் போலீஸாா் குவிக்கப்பட்டு, மோதலை கட்டுப்படுத்தி கைதிகளை தொகுப்பில் அடைத்தனா். மேலும் காயமடைந்த மூவரையும் மீட்டு சிறை மருத்துவமனையில் சோ்த்தனா். மோதல் தொடா்பாக சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT