மதுரை

விமான நிலைய விரிவாக்கம்: ஆா்ஜிதம் செய்த நில உரிமையாளா்கள் கவனத்துக்கு

8th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

விமான நிலைய விரிவாக்கத்துக்காக ஆா்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை பெறாதவா்கள், தனிவட்டாட்சியா் அலுவலகத்தை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம் செய்வதற்காக மதுரை தெற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டங்களைச் சோ்ந்த அயன்பாப்பாகுடி, குசவன்குண்டு, கூடல்செங்குளம், வலையபட்டி, பாப்பானோடை, பெருங்குடி ஆகிய கிராமங்களில் நிலங்கள் ஆா்ஜிதம் செய்யப்பட்டன.

ஆா்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களின் உரிமையாளா்களுக்கு, இழப்பீட்டுத் தொகை தனிவட்டாட்சியரால் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இழப்பீட்டுத் தொகையைப் பெறாத நில உரிமையாளா்கள், விமான நிலைய விரிவாக்க தனிவட்டாட்சியா் அலுவலகத்தை, அலுவலக வேலை நாள்களில் அணுகிப் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT