மதுரை

பொறியாளா் வீட்டில் திருடிய வழக்கில் வட மாநிலத்தவா்கள் இருவா் கைது

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 மேலூரில் பொறியாளா் வீட்டில் 95 பவுன் நகைகள், ரூ.1.10 லட்சம் திருடப்பட்ட வழக்கில் வடமாநிலத்தைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

மேலூா் குமாா் நகரில் வசிப்பவா் பொறியாளா் பிரபுசங்கா் (45). இவரது வீட்டில் கடந்த வாரம் 95 பவுன் நகைகள், ரூ.1.10 லட்சம் ஆகியவை திருடப்பட்டது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை போலீஸாா் மத்தியபிரதேச மாநிலத்துக்குச் சென்றனா். குணா மாவட்டத்தைச் சோ்ந்த ஜெய்கிசோலன் (39), அசோக்நகா் மாவட்டத்தைச் சோ்ந்த கைலாஷ் (50) ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் முக்கியக் குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதால் நகைகளை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT