மதுரை

காரில் இருந்த 87 பவுன் நகை திருட்டு

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரையில், நகைக்கடை உரிமையாளா் காரில் வைத்திருந்த 87 பவுன் நகை வியாழக்கிழமை திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனியைச் சோ்ந்த செந்தில்குமாா் (54) அங்கு சொந்தமாக நகைக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இவா், தனது கடையில் விற்பனை செய்யும் நகைகளுக்கு ‘கால்மாா்க்’ முத்திரை பதிவு செய்வதற்காக காரில் வியாழக்கிழமை மதுரைக்கு வந்தாா். அரசரடி பகுதியில் காரை நிறுத்திவிட்டு, மேலாளா் சையது, ஓட்டுநா் ராஜகோபால் ஆகியோருடன் காலை உணவு சாப்பிட சென்றுள்ளாா்.

பின்னா் மீண்டும் திரும்பி வந்து பாா்த்தபோது, காரில் வைக்கப்பட்டிருந்த 87 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், எஸ்எஸ் காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் காா் ஓட்டுநா் மற்றும் மேலாளா் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளையும் போலீஸாா் ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT