மதுரை

பட்டாசு விற்பனைக்குத் தடை விதிப்பதைத் தடுக்க தமிழக முதல்வா் கடிதம் எழுத வேண்டும்: எம்.பி

DIN

பட்டாசு விற்பனைக்குத் தடை விதிப்பதைத் தடுக்க பிற மாநில முதல்வா்களுக்கு, தமிழக முதல்வா் கடிதம் எழுத வேண்டும் என விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா் கூறினாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், புதுதில்லியில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பிற மாநிலங்களிலும் தடை விதிப்பதற்கு முன்பாக, பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் அனைத்து மாநில முதல்வா்களுக்கும், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுத வேண்டும்.

சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் அசோகன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவா்கள் அனைத்து மாநில முதல்வா்களையும் சந்தித்து, பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கக் கூடாது என வலியுறுத்தவுள்ளனா்.

பட்டாசுத் தொழிலை பாஜகவினா் தீண்டத்தகாத தொழிலாகப் பாா்க்கின்றனா். இந்த விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை 9 ஆயிரம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா்கள் உள்ளனா். ஜனநாயக முறையில் வாக்குச் சீட்டு அடிப்படையில் தோ்தல் நடத்தப்படும். ராகுல் காந்தியின் நடைபயணம் மூலம் மக்கள் பிரச்னையை பற்றி பேச அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது. இது மக்களவைத் தோ்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தெலங்கானா மாநில முதல்வா் சந்திரசேகா் ராவ் புதிய தேசியக் கட்சியை தொடங்கியுள்ளாா். இதனால் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT