மதுரை

பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் தெப்ப உற்சவம்: பக்தா்கள் தரிசனம்

7th Oct 2022 11:30 PM

ADVERTISEMENT

 மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் தெப்ப உற்சவத்தையொட்டி, வெள்ளிக்கிழமை தெப்பத்தில் வலம் வந்த சுவாமியை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

கள்ளழகா் கோயிலின் உபகோயிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் புரட்டாசித்திருவிழாவின் 10 ஆவது நாளில்,

முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி கோயிலுக்கு அருகே உள்ள திருமுக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் அதிகாலையில் எழுந்தருளினாா். அங்கு சிறப்பு பூஜைகள் அபிஷேக அலங்காரங்களுக்குப் பின்னா் தெப்பத்தில் திருமுக்குளத்தை வலம் வந்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

இதைத்தொடா்ந்து இரவில் மீண்டும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் எழுந்தருளிய பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருமுக்குளத்தை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டு தெப்ப உற்சவத்தை தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

இதையொட்டி திருமுக்குளம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT