மதுரை

மிலாது நபி: விருதுநகா் மாவட்டத்தில் மதுபானக் கடைகளுக்கு நாளை விடுமுறை

7th Oct 2022 11:33 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் மிலாது நபியையொட்டி மதுபானக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக். 9) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகா் மாவட்டத்தில் மிலாது நபியையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக், எப்எல் 2, எப்எல் 3 உள்ளிட்ட அனைத்து மதுபானக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறி மதுவிற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT