மதுரை

மதுரை மத்தியச் சிறையில் காவலா் தற்கொலை முயற்சி: அதிகாரிகள் விசாரணை

7th Oct 2022 11:35 PM

ADVERTISEMENT

 மதுரை மத்தியச் சிறையில் கூடுதல் கண்காணிப்பாளருடன் நடந்த வாக்குவாதத்தில், சிறைக்காவலா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடா்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை மத்தியச் சிறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கொடைக்கானல் கிளைச் சிறையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிவா் அறிவழகன். கொடைக்கானல் கிளைச்சிறை தற்போது செயல்படாததால், அங்குள்ள பொருள்களை அப்புறப்படுத்தி மதுரை மத்தியச் சிறைக்கு எடுத்து வருமாறு அறிவழகனுக்கு கூடுதல் கண்காணிப்பாளா் வசந்த கண்ணன் உத்தரவிட்டுள்ளதாக் கூறப்படுகிறது.

ஆனால் அறிவழகன் அந்தப்பணியை செய்யாமல் இருந்துள்ளாா்.

இதனால், காவலா் அறிவழகனை மதுரை மத்திய சிறைக்கு வரவழைத்த கூடுதல் கண்காணிப்பாளா் வசந்த கண்ணன், பணியைச் செய்யாதது குறித்து விசாரித்துள்ளாா். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து, காவலா் அறிவழகன் தனது மணிக்கட்டை இரும்பு ஆணி மூலம் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதில் சிறிய காயம் ஏற்பட்ட நிலையில், உடன் இருந்த காவலா்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனா். இந்தச் சம்பவம் தொடா்பாக, சிறை அதிகாரிகள் காவலா் அறிவழகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT