மதுரை

சிவகங்கையில் அரசு இசைப்பள்ளி கட்டடம் விரைவில் திறப்பு

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கையில் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு இசைப் பள்ளி கட்டடம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா்.

சிவகங்கை அருகே வாணியங்குடியில் நடைபெற்று வரும் அரசு இசைப் பள்ளி கட்டுமானப் பணிகளை ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வியாழக்கிழமை ஆய்வு செய்த பின் செய்தியாளா்களிடம் கூறியதாவது : கலைப்பண்பாட்டுத் துறை சாா்பில் இசைப் பள்ளி கட்டுமானப் பணிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ரூ. 1 கோடியே 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமாா் 75 சென்ட் பரப்பளவில் அலுவலக அறைகள் உள்பட 10 அறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று புதிய கட்டடம் விரைவில் திறக்கப்பட உள்ளது என்றாா்.

ஆய்வின் போது பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி செயற்பொறியாளா் பெருமாள்சாமி, அரசு இசைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் சுரேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT